Breaking

Saturday, April 27, 2019

குண்டுவெடிப்பில் மட்டக்களப்பு தேவாலயத்தில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை எவ்வளவு? கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்!


மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பில் 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் இறந்தனர்.

இதில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 14 ஆகும்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் கண்ணீர் அஞ்சலி புகைப்படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி துக்கம் அனுசரித்தார்கள்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மனதை பிழியும் விதத்தில் அமைந்துள்ளது.