Breaking

Sunday, April 28, 2019

சாய்ந்தமருதில் காயமடைந்தவர்கள் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதி!


சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் 4 வயது குழந்தை  மொஹமட் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அப்துல் காதர் பாதிமா சாதியா , சஹரான் ஹஷீமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 4 வயதுடைய மொஹமட் சஹரான் ருசெயினா என்ற அவரது மகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வௌ்ளிக்கிழமை கல்முனை - சாய்ந்த மருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 6 சிறார்கள் உட்பட 15 பேர் பலியாகியிருந்தனர்.

இதன்போது , காயமடைந்த குறித்த இருவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.