Breaking

Sunday, April 28, 2019

இலங்கையில் தனது தாயிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞன் கைது!


இலங்கையின் புத்தல - மஹகொடயாய பிரதேசத்தில் 66 வயதுடைய தனது தாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் 24 வயதுடைய  இளைய மகனே இந்த கீழ்த்தரமான செயலை புரிந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான மகனால் இரண்டு சந்தர்ப்பங்களில் வீட்டினுள் வைத்து அவரது தாய் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.