Breaking

Sunday, April 28, 2019

இலங்கையில் சொந்த குடியிருப்புகளில் இருந்து மாயமான 700 பேர்: வெளியான அதிர்ச்சி தகவல்!


இலங்கையில் ஈஸ்டர் தின குண்டுவெடிப்புக்கு பின்னர் நடந்தேறும் அசாதாரண சூழல் காரணமாக உயிருக்கு பயந்த 700 இஸ்லாமியர்கள் மாயமானதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளியன்று கல்முனை பகுதியில் ஐ.எஸ் ஆதரவாளர்களின் முகாம்களை நெருங்கிய பொலிசார் மீது அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது.

மட்டுமின்றி தற்கொலை வெடிகுண்டு தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டது. இதில் 6 சிறார்கள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் வெடிகுண்டை இயக்கி தற்கொலை செய்து கொண்டனர்.

நீர்கொழும்பு பகுதியில் வெறுக்கத்தக்க கோஷங்கள் எழுப்பிய நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி சுமார் 500-கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருக்கு பயந்து தலைமறைவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமறைவானவர்கள் பாகிஸ்தான் அகதிகள் எனவும், உள்ளூர் மக்களின் தாக்குதலுக்கு பயந்தே அவர்கள் மாயமானதாகவும் கூறப்படுகிறது.

பலரது குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளது. பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். பலரை கல்லால் அடித்தும் துரத்தியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.