Breaking

Sunday, April 28, 2019

தற்கொலைதாரியின் வீட்டிலிருந்து பாரியளவிலான பணம், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்பு!


இலங்கையில் அண்மையில் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் வீட்டிலிருந்து பாரியளவில் பணம், இரத்தினக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தெமட்டகொட மஹாவில பூங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மூன்று கோடி ரூபா பெறுமதியான மூன்று இரத்தினக் கற்கல், ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் மற்றும் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினமன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களின் வீட்டிலிருந்தே இவ்வாறு பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீடடில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.