Breaking

Tuesday, May 7, 2019

பயங்கரவாதி சஹ்ரானின் மரணத்தில் தொடரும் குழப்பம்! தங்கையின் மூலம் உண்மையை கண்டறிய முயற்சி!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலங்கைக்கான தலைவர் சஹ்ரான் ஹாசீம் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரி உயிரிழந்துள்ளதாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்ககவிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சஹ்ரானின் தங்கையின் இரத்த மாதிரியை பெற்று, சஹ்ரானின் உடற் பாகங்களை கொண்டு DNA பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகள் நீதிமன்றத்தில் கேட்டுள்ளனர்.

அதற்கமைய சஹ்ரானின் உடற்பாகங்களை கொண்டு DNA பரிசோதனை செய்து அறிக்கையை குற்ற புலனானய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு அரச பகுப்பாய்வாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குற்ற விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த பயங்கரவாதிகளின் உடற்பாகங்களில் விஷ பொருட்கள் உள்ளதா எனவும் ஆராயுமாறு நீதிபதி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.