Breaking

Tuesday, May 7, 2019

குற்ற புலனாய்வு அதிகாரிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு கதறிய மாகந்துரே மதுஷ்!

தனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்குமாறு பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் மாகந்துரே மதுஷ் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்டிருந்த மதுஷ் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்த போது, மதுஷ் பெரும் அச்ச நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குற்ற புலனாய்வு பிரிவினர் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது தான் செய்த குற்றங்கள், சர்வதேச தொடர்பு மற்றும் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் இடங்கள் உட்பட அனைத்தையும் வெளிப்படுத்துவதாக மதுஷ் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னை உயிருடன் விடுமாறு, கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவராகவும், போதைப்பொருள் கடத்தலில் பிரபலமானவராக மாகந்துரே மதுஷ் காணப்படுகிறார். இலங்கையில் பல கொலைகளை செய்தார் என்றும் மதுஷ் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் போதைப்பொருள் ஆபத்தான பொருளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள, நிலையில் மதுஷிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.