Breaking

Wednesday, May 8, 2019

கண்ட இடங்களில்... நடுரோட்டில் பாலியல் தொழிலாளிக்கு நடந்தது என்ன?

தமிழகத்தில் 26 வயது திருநங்கயை பொலிசார் லத்தியால் அடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூர் மெயின் ரோட்டில் கடந்த 30-ஆம் திகதி பாலியல் தொழிலாளியான சானா என்ற 26 வயது திருநங்கை அங்கு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த பொலிசார் அவரிடம் பேசிக் கொண்டிருந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல் அவரை நடுரோட்டில் தள்ளிவிட்டு லத்தியால் அடித்துள்ளார்.

அப்போது அவர் அங்கிருந்த தப்பிப்பதற்காக ஓடிய போது காலை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவலை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 20 தினங்களுக்கு முன்னர் சானா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் அவர் பெயிலில் வந்துள்ளார். அப்போது தான் அங்கு வந்த பொலிசார் இவரிடம் பிரச்சனை செய்ததாகவும், விலை எவ்வளவு என்று கேட்டுள்ளனர்.

அதன் பின்னரே லத்தியால் தாக்கியுள்ளனர்.

ஆனால் சானாவோ அதைப் பற்றி விசாரித்திருந்தால், அவர்கள் ஏன் என்னை அடித்து ஆட்டோவில் ஏற்ற வேண்டும், கண்ட படி அடித்தார்கள், பொலிஸ் வாகனம் ஏன் இல்லை, கண்ட இடங்களில் உதைத்தனர்.

இதனால் ஐந்து தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் சேலம் டிஎஸ்பி தங்கதுரையிடம் கேட்ட போது, இதற்கு முன் அவர் மீது திருட்டு குற்றம் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு இப்படி பகிரங்கமாக அடிப்பதா என்ற போது, அவர் அதற்கு சரியான விளக்கம் கொடுக்காமல் இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.