Breaking

Friday, May 24, 2019

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் பலி!

இலங்கையின் வெல்லவாய குடாஓய பிரதேசத்தில் இன்று (24-05-2019) மதியம்  இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எதிலிவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்றைய முச்சக்கரவண்டியில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.