Breaking

Saturday, May 25, 2019

இன்றைய ராசிபலன் 25.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!


தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம் : மோதலை தவிர்த்திடுங்கள், அது உங்கள் உடல்நலனை கெடுக்கும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் - ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். காதல் மன நிலையில் இருப்பீர்கள் - எனவே உங்களுக்கும் காதலகுக்கும் ஸ்பெஷல் பிளான் எதையாவது செய்யுங்கள். உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்..
 
ரிஷபம் : நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் - எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். இன்று, அருமையான திருமண பந்த்த்தின் இனிமையை தெரிந்து கொள்வீர்கள்.

மிதுனம் : ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். உங்கள் வீட்டு சூழ்நிலையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு, எல்லாவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யுங்கள். காதலின் வலியை உணர்வீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

கடகம் : உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ரிலாக்ஸ் பண்ண அதிக நேரத்தை உருவாக்கித் தரும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் இந்த உலகமே இன்று முடிவதாய் இருந்தாலும் உங்கள் துணையின் அன்பான பிடியில் இருந்து உங்கலை யாராலும் விலக்க முடியாது.

சிம்மம் : மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை - ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. புதிய நட்புகள் நீண்ட காலம் நீடிப்பதாகவும் அதிக பயன் தருவதாகவும் இருக்கும். உங்கள் மனதிற்கினியவரிடம் கருத்தை இன்றே கூறுங்கள், நாளை என்பது தாமதமாக இருக்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் - மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாள்..

கன்னி : ஜாலியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் - எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள். பயணம் ரொமாண்டிக் தொடர்பை வளர்க்கும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய - நிறைய பிரச்சினைகள் இருக்கும். உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

துலாம் : அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். குடும்ப நிகழ்ச்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். உங்கள் தோற்றத்தை மேம்படுத்தக் கூடிய, வாய்ப்புள்ள பார்ட்னர்களை ஈர்க்கக் கூடிய வகையில் மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.

விருச்சிகம் : சில டென்சன்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். இன்று நண்பர் பக்கத்தில் இல்லாததால் அதன் அருமையை உணர்வீர்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இன்று, திருமண பந்த்த்தின் அருமையை பல விதத்திலும் உணருவீர்கள்.

தனுசு : உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பதை அறிவீர்கள் - ஆனால் பேசுவதில் கவனமாக இருங்கள். மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் - அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, உங்கள் துணையுடன் ஏற்பட்ட பிணக்கு இனிமையான நினைவுகளை நினைவு கூர்வதால் தீரும். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

மகரம் : பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். ஒரு வெளி நபர் உங்கள் இருவருக்கும் நடுவில் சண்டை மூட்டிவிட முயற்சி செய்வார். ஆனல்ல் நீங்கள் அதற்க்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.

கும்பம் : ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் கூட்டம் அதிகமான பேருந்தில் பயணம் செய்யும்போது தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் - ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். பாசிடிவான மற்றும் ஆதரவான நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

மீனம் : நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். ரொமாண்டிக் எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.