Breaking

Thursday, May 23, 2019

மீண்டும் தமிழகத்திடம் தோற்றுப் போன பாரதிய ஜனதா கட்சி

இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் பாஜக,அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதிமுக கூட்டணி தமிழகத்தில் 2 இடங்களில் மட்டுமே வாக்கு எண்ணிக்கையில் இருந்து முன்னிலை வகித்து வருகிறது, அதுவும் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

பாஜக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்பு தூணாக இருந்து பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.