Breaking

Sunday, May 19, 2019

விகாரையில் வழிபாட்டுக்கு மறுத்த விகாராதிபதியை கோடாரியால் தாக்கிய நபர்!

இலங்கையில் வெசாக் தினத்தன்று விகாரையில் வழிபாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த நபர் அந்த விகாரையின் விகாராதிபதியை கோடாரியால் கடுமையாக தாக்கியுள்ளார் என தம்புத்தேகம காவல் துறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (18-5-19) சனிக்கிழமை 8.00 மணிக்கு மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். எனினும், அவர் மது போதையில் இருந்ததனால், விகாராதிபதி மறுத்துள்ளார்.

இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்நபர், மீண்டும் 8.30 மணியளவில் விகாரைக்கு திரும்பிய அந்த நபர் விகாராதிபதியிடம் மீண்டும் அனுமதி கோரியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த விகாராதிபதியை கோபம் கொண்டு தனது இடுப்பில் இருந்த கோடாரியினால் தாக்கியுள்ளார்.

இத் தாக்குதலின்போது காயமடைந்த விகாராதிபதியை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், தாக்குதல் நடாத்திய நபர் இன்று (19-5-19) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம காவல் துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் நபர் விகாரையிலேயே தான் வந்த மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்