Breaking

Friday, May 24, 2019

தற்கொலை குண்டுத்தாரிகளுடன் தொடர்பு! இலங்கையருக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட நிலை! காணொளி!

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த 39 வயதான இலங்கையர் ஒருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அப்துல் சலாம் இர்ஷாட் என்பர் என குறிப்பிடப்படுகின்றது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மியன்மாரிற்கு சுற்றுலா விசாவில் இந்த நபர் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்து அவர் வெளியேறவில்லை எனவும், குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அந்த நபர் அங்கு தங்கியிருந்ததாக மியன்மார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




ஆபத்தான நபர்களின் பட்டியலில் இந்த இலங்கையரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக மியன்மார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள மியன்மார் பொலிஸார் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு சுற்றுலா திணைக்களம் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அந்த விசேட பொலிஸ் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களுடன் இந்த இலங்கையர் நெருக்கமான தொடர்புகளை  வைத்திருந்தார் என மியன்மார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.