Breaking

Saturday, May 18, 2019

சஹ்ரானின் புகைப்படத்தை laptop இல் வைத்திருந்த ஆசிரியை கைது!

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியையொருவர் இன்று (18) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்

கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத் திட்டத்தில் இன்று அதிகாலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்

இதன்போது மடிக்கணனி ஒன்று வீடு ஒன்றின் மேசை மீது இயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் குறித்த கணனியை சோதனை மேற்கொண்ட நிலையில் அதிலிருந்து அண்மையில் இலங்கையில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரானின் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் அக்கணனியை பாவித்தவரின் வட்சபிலும் குறித்த புகைப்படங்கள் காணப்பட்டதை அடுத்து அவ்வீட்டில் இருந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பாடசாலை ஆசிரியரான முஹமட் இஸ்மாயில் ஜஹானா என்பவர் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதேவேளை இச்சுற்றிவளைப்பின் போது மற்றுமொரு நபரும் அடையாள அட்டை இன்றி காணப்பட்டமையினால் பொலிஸாரினால் கைதானார்.

இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு கைதாகி அழைத்து செல்லப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியரை நீண்ட நேரம் விசாரித்த பொலிஸார் வாக்குமூலம் ஒன்றை பெற்று விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.