Breaking

Thursday, May 30, 2019

வயிற்று வலியில் துடித்த 16 வயது சிறுமி! அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!


ரஷ்யாவை சேர்ந்த பதினாறு வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஐந்நூறு கிராம் எடையுள்ள தலை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பதினாறு வயது சிறுமி, கடந்த சில jினங்களுக்கு முன்பு முடி உதிர்வு அதிகமாகிவிட்டதாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டும் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது ஒரு சோதனையில் அவருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பரிசோதனையில், அவருடைய வயிற்றில் மர்ம பொருள் ஒன்று அடைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, பத்து வருடங்களாக அவர் தனது முடியை சாப்பிட்டு வருவது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரைப்பையில் இருந்து ஐந்நூறு கிராம் எடையிலான பந்து போன்ற தலை முடி அகற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், Rapunzel என்கிற நோய்க்குறியானது மிகவும் அரிதாகவே வரும். இதற்கு முன்னர் பிரித்தானியாவை சேர்ந்த ஒரு சிறுமி, தலை முடியை சாப்பிட்டு வந்ததால், இரைப்பையில் அடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

நல்லவேளையாக இந்த சிறுமிக்கு பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவருடைய உடலில் என்பது சதவிகித இரைப்பை முடியினால் அடைக்கப்பட்டிருப்பது என மேலும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.