Breaking

Friday, May 24, 2019

இலங்கையில் திடீர் சோதனை! அரசியல்வாதி உட்பட பலர் கைது

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீரன் சோதனை நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ, திஹாரி பிரதேசதத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை போது பிரதேச சபை உறுப்பினர் உட்பட 26 பேர் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர், அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 500 அதிகாரிகள் இணைந்து கொண்டுள்ளனர்.

பொலிஸ் நாய் பிரிவும் இந்த சோதனை நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 26 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அத்தனகல்ல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவரும் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.