Breaking

Sunday, May 19, 2019

I.S பயங்கரவாத அமைப்பு இலங்கையில் காலடி வைத்த ஆண்டு தெரியுமா? வெளியான புதிய தகவல்கள்!

இஸ்ரேலில் செயற்பட்ட மொஸாட் ( Mossad ) என்ற பயங்கரவாத அமைப்பு இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாக 2015ஆம் ஆண்டு மே மாதம் உருவாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் தோன்றிய I.S என்ற பயங்கரவாத அமைப்பு, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் தனது முதல் அடியை வைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பை சுட்டிக் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஷாக் அஹமட் மொஹமட் என்பவர் ஓமானுக்கு சென்று துருக்கி ஊடாக சிரியா சென்றுள்ளார். அங்கு I.S தீவிரவாதிகளுக்கு இலங்கை தலைவராக இணைந்து தனது செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

அபு ஹம்சா செய்லானி என அந்த அமைப்பினால் அவருக்கு பெயரிடப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுடன் சிரியா சென்று மதத்திற்காக உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணமாகும்.

இஷாக்கின் சகோதரர் நிலாம் (அபு சுனயீர் செய்லானி) உட்பட குடும்பத்தின் 38 பேர் அந்த வருடமே சிரியா சென்றடைந்துள்ளனர்.

குடும்பத்துடன் உயிர் தியாயம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். இந்த குடும்பத்தினர் சிரியாவில் பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபடும் போது இலங்கையில் பயங்கரவாதம் தலை தூக்க ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.