Breaking

Sunday, May 19, 2019

தமிழ் இளைஞன் ஹோட்டலில் வைத்து கைது; I.S தீவிரவாதிகளுடன் தொடர்பாம்?

இலங்கையின் பதுளை மாவட்டம் எல்ல பகுதியில் வைத்து கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையை சேர்ந்த இளைஞர் ஒருவரே காவல் துறையினரால் எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் கைபேசியில் I.S.I.S  தீவிரவாதிகளின் தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் இருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாக வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இளைஞரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல் துறை  மேற்கொண்டுவருகின்றது.