Breaking

Sunday, May 19, 2019

யாழ். மண்கும்பான் பகுதியில் கோர விபத்து, ஒருவர் பலி! இருவர் ஆபத்தான நிலையில்!

யாழ். பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மண்டைதீவு சந்திக்கருகில் இன்று (19-5-19) மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் மூவரும் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துள்ளானது என காவல் துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தினால் சுமார் 200 மீற்றர் தூரம் கார் தூக்கி வீசப்பட்டுள்ளது. கார் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.