Breaking

Friday, May 24, 2019

இலங்கையை மீண்டும் பரபரப்பாக்கிய வெடிகுண்டுகள்! அதிர்ச்சி பின்னணி வெளியானது!

இலங்கை நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அமைதியின்மை உருவாக்கும் வகையில் சூழ்ச்சிக்கார கும்பல் ஒன்று செயற்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று (24-05-2019) காலை பதுரலிய பாடசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளின் பின்னணியிலும் இந்த கும்பலே செயற்பட்டுள்ளது.

பதுரலிய பாடசாலையில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் இவர்களால் கைக்குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலையை நடத்தி செல்வதனை தடை செய்வதற்கு அல்லது அரசியல் இலாபம் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டுகளை வெடிக்க வைக்க வேண்டும் என்றால் அதனை ஒன்றாக சேர்த்து வைத்து வெடிக்க முடியாது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது குண்டுகளை அவதானித்து குழப்பம் அடைய வேண்டும். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டு பாடசாலையை மூட வைக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

மீண்டும் பாடசாலையை மூட வைப்பதற்காக சிலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காவற்துறை கண்டுபிடித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள பதுரலிய பாடசாலையில் இன்று காலை பதின்மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

பாடசாலையின் காவலாளி வழங்கிய தகவலுக்கமைய இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.