Breaking

Friday, May 24, 2019

இலங்கையில் பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு! காவற்துறை தகவல்

இலங்கையின் களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பதுரலிய, பாலிந்தநுவர ஆரம்ப பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்து கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இன்று (24-05-2019) காலை மொத்தமாக பதின்மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்த பொதி தொடர்பில் காவலாளி சோதனையிட்ட போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவலாளி இது தொடர்பில் உடனடியாக பாடசாலை அதிபரிடம் அறிவித்துள்ளார்.

அதிபர், பதுரலிய காவற்துறைக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து இராணுவத்தினர் அங்கு குண்டுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் பதுரலிய காவற்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.