Breaking

Sunday, May 19, 2019

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி - நான்கு பேர் காயம்!

இலங்கையின் கரந்தெனிய - எருவ்வல பாலத்தின் அருகாமையில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நாலு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (18-5-2019) இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கரந்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்த கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.