Breaking

Friday, May 17, 2019

முல்லைத்தீவில் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த எலும்புக்கூடு!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கழிவறை குழி ஒன்றை அகழும் முயற்சியில் ஈடுபட்ட போதே இவ்வாறு எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் அதனுடன் விடுதலைப்புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், தமிழன் குண்டு என்பவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் குறித்த எலும்புக்கூடு மற்றும் குண்டுகள் மீட்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் நாளைய தினம் நீதிபதி தன்னுடைய மேலதிக விசாரணைகளில் பின் எலும்புக்கூடு அவ்விடத்தில் இருந்து அகற்றப்படும் என தெரிகின்றது.