Breaking

Tuesday, May 21, 2019

I.S தீவிரவாதி சஹரான் ஹாஷிமின் சகாக்களை அழைத்துச் சென்ற விவகாரம் குற்ற புலனாய்வு பிரிவுக்கு கசிந்தது!

சஹரான் ஹாஷிமின் அம்பாறை - கல்முனை பிரதேச I.S இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாளர் சியாம் மற்றும் நான்கு பேர் நேற்று (20-05-2019) குற்ற புலனாய்வு பிரிவினரால் கைதாகியுள்ளனர்.

இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்னும் நான்கு பேர் கல்முனையில் வைத்து கைதாகியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 26ம் திகதி சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு இறந்த நியாஸ் ரல்வான் ஆகியோரை நிந்தாவூரிலிருந்து கடற்கரை பாதை வழியாக சாய்ந்தமருது வரை அழைத்து வந்தவர் சியாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.