Breaking

Monday, May 20, 2019

இலங்கை பாராளுமன்றத்திற்குள் I.S பயங்கரவாதியா? ஒருவர் அதிரடியாக கைது!

இலங்கையின் பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளராக செயற்பட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது நேற்றையதினம் (19-05-2019) செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் காவல் துறை  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.

குறித்த முஸ்லிம் நபர் பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத்துடன் (NTJ) பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என காவல் துறை மேலும்  தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க உறுதி செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.