Breaking

Tuesday, May 21, 2019

பிரதமர் சபையில் இருக்கும் போது குண்டு வெடிக்க வேண்டும் – விமல் வீரவன்ச

பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே அது இடம்பெற வேண்டும் என தான் வேண்டிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21-05-2019) இடம்பெற்றுவரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விசாரணைகளில் நாடாளுமன்ற ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என சபாநாயகர் அறிவித்தார்.
.
நாளாந்தம் எமது அவதானம் இதில் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.