Breaking

Tuesday, May 21, 2019

சற்றுமுன் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியானது!

இலங்கையின் கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், தேசிய தௌஹீத் ஜமாத் (N.T.J) அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் கொல்லபபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரபணு (DNA) பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

சஹ்ரான் ஹாசீமின் மகள், சகோதரி மற்றும் சஹ்ரானின் மனைவி ஆகியோரின் உயிரி (DNA) மாதிரிகளைக் கொண்டு இந்த மரபணு பரிசோதனைகள் சில நாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரபணு குறித்த விசாரணை அறிக்கை இன்றைய தினம் (21-05-2019) குற்ற புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.