Breaking

Sunday, May 19, 2019

சஹ்ரானிற்கு மனைவி மற்றும் அழகான குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்தமைக்கு காரணம்!

தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானிற்கு, மனைவி அழகான குழந்தைகள் இருக்கின்றார்கள், ஆனால் அவர் அனைத்தையும் மறந்து தனது உயிரை மாய்க்கும் அளவிற்கு சிந்தித்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தெரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாத கருத்துக்குள் உள்வாங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டே இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.

இதனை விட இந்த தற்கொலை தாக்குதலில் உயிர்களை மாய்த்தவர்கள் தமது குடும்பத்தார் சிறு குழந்தைகள் என அனைவரையுமே மாய்க்கும் அளவிற்கு முடிவுகளை எடுத்திருக்கின்றார்கள்.

பெண்ணே உயிரை மாய்க்கும் முடிவை எடுத்திருக்கின்றார். ஆகவே இவ்வாறான பாரதூரமான அடிப்படைவாதம் எவ்வாறு வேரூன்றியது என்று சிந்திக்க வேண்டும்.

உலகத்தில் இஸ்லாமிய வஹாப் வாத நிலைப்பாட்டினால் அடிப்படைவாதம் உருவெடுக்கின்றது.

இந்த வஹாப் வாதம் கடந்த 20 வருடங்களாக இலங்கையினுள் பாரிய அளவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கல்வியின் பெயரில் பாடசாலைகளில் மத்ரஸாக்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர்களால் இவ்வாறு அடிப்படைவாதத்தை நோக்கி கற்பித்தல் விடயங்களை தடுப்பது பற்றி சிந்திக்காது அடிப்படைவாதத்தினை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதில் பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.