Breaking

Wednesday, May 29, 2019

இலங்கை செல்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு... என்ன தெரியுமா?

இலங்கை செல்பவர்களுக்கு இந்திய அரசு புதிய அறிவுரைகளை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, அவசியமின்றி இலங்கைக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து இலங்கையில் இயல்பு நிலை திரும்பு வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், மேலும், கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பந்தொட்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.