Breaking

Monday, May 20, 2019

இலங்கையில் நடந்த துயரம்! பெண்னின் உயிரை பறித்த பேரூந்து!

இலங்கையில் பேரூந்து சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று ஹக்மன பகுதியில் இன்று (20-05-2019) திங்கட் கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஹக்மனயிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற தனியார் பேரூந்தில்  பயணித்த பெண்ணொருவர் கொங்கல தாஹிலிகடே சந்தியில் பேரூந்து நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கி செல்ல முற்பட்ட வேளையிலேயே பேரூந்தின் முன்சில்லினுள் அகப்பட்டு அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பகுதியை சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹக்மன காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.