Breaking

Thursday, May 23, 2019

இலங்கையில் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மோதல் சம்பவம் - ஒருவர் பலி!

இலங்கையின் சபுகஸ்கந்த - மாகொல தெற்கு பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது பலர் மது அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் நாற்பத்தெட்டு வயதுடைய அங்கெட்டிகம பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.