Breaking

Friday, May 17, 2019

முதல் குழந்தையை பெற்றெடுத்த உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாரியின் மனைவி!

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியான ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை சென். அந்தோணி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய 22 வயதான அலாவுதீன் அகமது முவாதின் மனைவி, கடந்த மே 5ஆம் திகதி குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக நீதின்மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈஸ்டர் தினத்தன்று நாட்டிலுள்ள தேவாலயங்கள், ஹோட்டேல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 300க்கும் பேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களிலை மேற்கொண்ட ஒன்பது பேரில் அலாவுதீன் அகமது முவாதும் ஒருவராவார்.

குறித்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, முவாத்தின் தந்தையான அஹமட்லெப்பை அலாவுதீன் வாக்குமூலம் அளிக்கையில்,

"சட்ட பட்டதாரியான முவாதிற்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. கடந்த மே 5ம் தேதி அவருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.

கடைசியாக ஏப்ரல் 14ம் திகதி - முவாத், அவருடைய மூத்த சகோதரியின் இல்லத்திற்கு வந்தபோது தான் அவனை பார்த்தேன். அவருடைய செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபா ஏற்பாடு செய்திருந்தேன்" என்றார்.

இதேவேளை, முவாத் எழுதிய கடிதத்தில், "என்னை யாரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் முவாத் இறந்த பின்னரே குடும்பத்தாருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.