Breaking

Tuesday, May 21, 2019

மன்னாா் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் வெடி சத்தம்!


மன்னாா் நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் நேற்று இரவு திடீரென வெடி சத்தம் கேட்டதால் கிராம மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

அச்சங்குளம் விளையாட்டு மைதானத்தின் அருகில் காணப்படும் பாழடைந்த வீடொன்றில் இருந்தே குறித்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது.

இந்நிலையில் உடனடியாக அச்சங்குளம் கடற்படையினர், மற்றும் முருங்கன் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

குறித்த வீட்டுக்குள் பட்டாசு வெடித்தபடியால் அழுத்தம் அதிகமாகி பெரும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறி்த்த இடத்தில் சிறு ஆணிகளும், போத்தல் துண்டங்களும் சிதறிக் கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.