Breaking

Tuesday, May 21, 2019

முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்றோர் கைக்குண்டுடன் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்து குறித்த ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளை காவற்துறையினரால் நேற்றிரவு (21-05-2019) கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து வைகாசி பொங்கல் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் காவற்துறையினருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன்பின்னர் காவற்துறை குறித்த வானில் குண்டை வைத்து விட்டு வானில் வந்தவர்கள் குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைப்பதாக குடும்பத்தினர் காவற்துறை மீது குற்றம் சுமத்துகின்றனர்.

திட்டமிட்ட வகையில் காவற்துறை குண்டை வைத்துவிட்டு தமது உறவுகளை கைது செய்திருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.