Breaking

Monday, May 20, 2019

உயிர்த்தஞாயிறு பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு! அதிபர்,உப அதிபர் அதிரடியாக கைது!

இலங்கையில் உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன் தொடர்புடைகளை வைத்திருந்த இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்களின் அதிபர், உப அதிபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (14-05-2019) அன்று இவர்கள் விசேட அதிரடிப்படையினரால் ஹொரவப்பொத்தான என்ற இடத்திலுள்ள பத்தேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றையதினம் (18-05-2019) கெப்பிட்டிகொலாவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களான அதிபர் மற்றும் உப அதிபருக்கு தேசிய தவ்ஹீத் அமைப்பின் (NTJ) எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நன்கு தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.