Breaking

Friday, May 17, 2019

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்: பரிதாபமாக உயிரிழிந்த ரம்யா கிருஷ்ணா!

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. மருத்துவரான இவர் கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யா கிருஷ்ணா கடற்கரைக்கு சென்றார்.

அப்போது கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதில் பரிதாபமாக உயிரிழந்த ரம்யா கிருஷ்ணாவின் உடலை மீனவர்களும் காவல்துறையினரும் கடலுடன் போராடி மீட்டனர்.

ரம்யா கிருஷ்ணாவின் உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. செல்பி மோகத்தால் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம் பெண் உயிரிழந்தது ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.