Breaking

Wednesday, May 22, 2019

இலங்கையில் சற்றுமுன்னர் காவற்துறை- மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம்! காவற்துறை அதிகாரி பலி!

இலங்கையின் தென் பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை அக்குரஸ்ஸ - உருமுத்தையில் பகுதியில் இன்று (22-5-19) துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவற்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை கைது செய்ய செல்லும் போது, எதிர் தரப்பினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த காவற்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த முப்பது வயதுடைய காவற்துறை கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்கள் ஊருமுத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை  தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்ய அக்குரஸ்ஸ காவற்துறை தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.