Breaking

Saturday, May 18, 2019

நுவரெலியாவில் பொலிஸாரை திணறடிக்கும் மர்மநபர்!

இலங்கையின் நுவரெலியாவில், இன்று (18-5-19) காலை முதல், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை தேடும் வேட்டையில், நுவரெலியா காவல் துறை ஈடுபட்டு வருகின்றது.

நபரொருவர், நுவரெலியாவின் பிரபல உணவகமொன்று முன்னால், குளிர்பான போத்தலொன்றுடன் நடமாடிக்கொண்டிருந்ததாகவும் அதை வெகுநேரமாக அவதானித்த அங்குள்ள கடை உரிமையாளர் ஒருவர், இது குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல் துறை, குறித்த நகரப் பகுதியிலுள்ள CCTV காணொளிகளைப் பரிசோதித்த பின்னர், அந்நபரின் நடமாட்டம் குறித்து அறிந்துகொண்டதாகவும் எனினும் தற்போது அவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நுவரெலியாவின் பிரதான பஸ் தரிப்பிடம், பௌத்த விகாரை, பிரதான தபால் நிலையம், புனித சேவியர் தேவாலாயம் மற்றும் நகர பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.