Breaking

Saturday, May 18, 2019

வற்றாப்பளை கண்ணகி அம்மன் அடியவர்களுக்கு அவசர அறிவித்தல்! பகிருங்கள்!

வற்றாப்பளை பொங்கலுக்கு பறவைகாவடி/ தூக்குகாவடி நேர்த்திகளை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ளலாம் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் தொடர்பாக முதலில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தூக்குகாவடி/ பறவைகாவடிகளை எடுக்க முடியாது என கூறப்பட்ட போதிலும் வியாழக்கிழமை எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஆலய நிர்வாகம் மேற்படி நேர்த்திகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த நேர்த்திகளை மேற்கொள்ளவுள்ளவர்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.