Breaking

Thursday, May 30, 2019

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கார் கோரவிபத்து! ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஒமந்தை A9 வீதியில் (காவல் நிலையத்திற்கு அருகே) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17 வயதுடைய இளைஞரோருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா கோவிற்குளத்தினை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியையான 82 வயதுடைய வையாபுரிநாதன் திலகவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றது.