Breaking

Sunday, May 19, 2019

500 வெசாக் கூடுகளை தீயிட்டு கொளுத்திய இளைஞர் குழு!

இலங்கையின் சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்றால் தயாரிக்கப்பட்டிருந்த ஐந்நூறு (500) வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு காவல் துறை அனுமதியளிக்காத நிலையில், குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று (18-5-19) சாலியவெவ பிரதேசத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து வெசாக் கூடு தொகுதியொன்றை தயார் செய்திருந்த நிலையில், அவற்றில் ஒரு புறம் பௌத்தர்களின் சின்னமும் மறுபுறம் கத்தோலிக்கர்களின் சிலுவை சின்னமும் பொறிக்கப்பட்டமையால் அங்கு முறுகல் நிலையொன்று ஏற்பட்டது.

இதன்பின்னர் காவல் துறையினரால் குறித்த வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் மேலும் முரண்பட்டுக்கொண்ட இளைஞர்கள், தாம் தயாரித்த வெசாக் கூடுகளை வீதியில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.