Breaking

Sunday, May 19, 2019

கைகள் இல்லாமல் பிறந்து இன்று சாதனையாளராக பலபேருக்கு முன்னுதாரணமாக திகழும் பெண்!

கைகள் இல்லாத பெண் விமானி ஒருவர், கால்களால் விமானம் ஓட்டி சாதனை செய்து வருவதுடன் பார்ப்போரை பிரமிப்பிலும் ஆழ்த்தி வருகிறார்.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெசிகா காக்ஸ் (30). இவர் ஒரு பெண் விமானி. ஜெசிகா பிறக்கும் போதே கைகள் இல்லாமல் பிறந்தவராவார்.

ஜெசிகாவின் சிறு வயதில், உறவினர் ஒருவருடன் விமானத்தில் விமானிக்கு அருகே அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்று முதல் விமானத்தின் மீதும், விமானி பணி மீதும் தீராத ஈர்ப்பு கொண்ட ஜெசிகா பட்டப் படிப்பை முடித்த பின்னர், இதற்கான பயிற்சி பெற விரும்பினார்.

சரியான பயிற்சியாளர், முறையான வழிமுறைகள் கிடைக்கவே வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பின்னர் கடும் பயிற்சி மேற்கொண்டு, கடந்த 2008ம் ஆண்டு லைட் ஸ்போர்ட் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார். இதனால் கைகள் இன்றி விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி எனும் சாதனையைப் புரிந்தார்.

ஜெசிகா விமானம் ஓட்டுவது மட்டுமல்லாமல், கராத்தே, கார் ஓட்டுதல், சமையல் என அனைத்து துறைகளிலும் வித்தைகளை கற்றுக் கொண்டு சகலதுறை வீராங்கனையாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.