Breaking

Thursday, May 23, 2019

யாழ்ப்பாணத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக திரண்ட ஐம்பது இளைஞர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாழ். நல்லூர் பகுதியில் திரண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவற்துறையைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.

நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடைய நபரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு நண்பர்கள் ஒன்று கூடியனர்.

தகவல் அறிந்த காவற்துறை, விடுதிக்குள் நுழைந்தனர். எனினும் காவற்துறை உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர்.

அங்கிருந்த சுமார் முப்பது பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறை, 5 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில்  நடந்த வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களே தப்பி ஓடியுள்ளனர் என்று காவற்துறை தெரிவித்துள்ளது.