Breaking

Saturday, June 8, 2019

இலங்கையில் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்!

திவுலபிட்டிய – தெல்வகுர பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் தெல்வகுர பகுதியை சேர்ந்த 77 வயதான வயோதிப பெண் என்பதோடு, அவர் அந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி திவுலபிட்டிய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.