Breaking

Saturday, June 8, 2019

போட்டிக்கு பேருந்துகளை செலுத்தியதில் ஏற்பட்ட விபரீதம்!

அகுரெஸ்ஸ தெனியாய பிரதான வீதியின் ஹுலங்தாவ பிரதேசத்தில் இன்று காலை பேருந்து கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தெனியாய நோக்கி பயணித்த இரண்டு பேருந்துகளின் சாரதிகள் போட்டிக்கு பேருந்துக்களை செலுத்தியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 15 பேர் அகுரெஸ்ஸ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு , இரண்டு பேர் மொரவக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அகுரெஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் 6 பேர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில்  அகுரெஸ்ஸ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.