Breaking

Wednesday, June 19, 2019

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து! ஐவர் பலி! 12 பேர் அவசர சிகிச்சை பிரிவில்!

இலங்கையின் பொலன்னறுவையில் இன்று (19-6-19) அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை  தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். பன்னிரெண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 - 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் காவல் துறை மேலும் தெரிவித்துள்ளது.

திம்புலாகல, மிஹிது பெரஹராவை பார்வையிட சென்று மீண்டும் வீடு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.