Breaking

Saturday, June 8, 2019

யாழில் வாள்வெட்டுக் கும்பல் கொடூர தாக்குதல்! பாடசாலை மாணவன் படுகாயம்!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் மாணவன் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பலொன்று வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் நவாலி - சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் நேற்று (07-06-2019) இரவு பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், பதினாறு வயதுடைய மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது படுகாயமடைந்த மாணவனின் சகோதரர் மீதே குறித்த கும்பல் தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும்,படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.