Breaking

Saturday, June 15, 2019

இலங்கையில் தீயில் கருகி உயிரிழந்த பெண்மணி!

இலங்கையின் களனி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (14-6-19) பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

காவற்துறை அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 74 வயதான அனஸ்ட்ரோஷியா மரியா அரலந்திர என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தால், மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து விட்டு, பெண்ணின் மகளும், அவரது கணவரும் அயல் வீடொன்றில் நடந்த வைபவம் ஒன்றுக்கு சென்றிருந்தனர் எனவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

மெழுகுவர்த்தி கீழே விழுந்து இந்த தீ பரவியதாக காவற்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களனி காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.