Breaking

Friday, June 7, 2019

சிசேரியனுக்கு பின் கருத்தரிக்க முடியவில்லை! மொஹமட் ஷாபி மீது இளம் முஸ்லிம் பெண்ணொருவரும் முறைப்பாடு!

சர்ச்சைக்குரிய வைத்தியரான சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வரும் நிலையில் நேற்றைய தினம் முஸ்லிம் பெண்ணொருவரும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

சிங்கள நபரொருவரை திருமணம் செய்துள்ள குறித்த 26 வயதான முஸ்லிம் பெண் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் செய்துள்ள முறைப்பாட்டில், “ தனது இரண்டாவது பிரசவத்திற்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதன்போது வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபியே தனக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை செய்ததாகவும், அதன் பின் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அதிகளவு சொத்துக்களை சேகரித்தமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது 4000இற்கும் அதிகமான பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.