Breaking

Friday, June 28, 2019

இலங்கையில் பதற்றம்- ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை - குடும்பம் மீது கைக்குண்டு தாக்குதல்!


இலங்கையின் களுத்துறையில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மத்துகம, தெல்கஹவத்தை வீடு ஒன்றுக்கு அருகில் குறித்த அதிகாரி இன்று (28-6-19) வெள்ளிக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் நாற்பத்துநான்கு வயதான கரண்ணாகொட முதலிகே மனோஜ் குமார ஜயதிலக்க என்ற 2  பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை சிப்பாய் ஒருவரினாலே இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர் உயிரிழந்த நபரின் உறவினர் என காவல் துறை மேலும் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் மனைவி உடுவெல மகா வித்தியாலயத்தின் அதிபர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட சமூர்த்தி அதிகாரி, அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த சந்தேகநபர் கைக்குண்டு ஒன்றையும் வீசியுள்ளார் என காவல் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.